Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஜெயரட்ணம்
நாட்டில் தற்போது நிலவிவரும் வரட்சியான வானிலையின் காரணமாக, களுத்துறை மாவட்டத்தின் பாணந்துறை, களுத்துறை, தொடங்கொடை, பேருவளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பிரதேசங்களில், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மூலம் வழங்கப்படும் குழாய் நீரில், உப்பு கலந்து காணப்படுவதால், அப்பகுதியில் வாழும் சுமார் 69,000 குடும்பங்கள் குடிநீரின்றி பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
எனவே, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மூலம் வழங்கப்படும் குடிநீருக்கான மாதாந்தக் கட்டணத்தை, பாவனையாளர்களிடம் இருந்து அறவிட வேண்டாமெனவும், பாவனையாளர்கள் அதனைச் செலுத்த வேண்டிய அவசியமில்லை எனவும், களுத்துறை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் இன்று (25) தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அதன் தலைவர் பியல் நிஷாந்த தெரிவித்தார்.
மேலும், கடல்நீரானது குடிநீரில் கலந்துள்ளதால், உப்பு தன்மையடைந்துள்ளதுடன், குடிநீரில் அதிக அளவிலான விஷத்தன்மை காணப்படுவதாகவும் இதனை பருகுவதன் மூலம், பல்வேறு நோய்கள் உண்டாகலாம் எனவும் தெரிவித்த அவர், அரசாங்கம் இது தொடர்பில், அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், இப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஒன்று எட்டப்படும் வரை, மக்களிடமிருந்து அறவிடும் குடிநீருக்கான கட்டணத்தை வசூலிக்க வேண்டாமென, அபிவிருத்திக் குழுவிர் தீர்மானம் எடுக்கப்பட்டதாக, அவர் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பில், குறித்த நிறுவனத்துடன் கலந்தாலோசித்து, சிறந்ததொரு தீர்மானத்தை பெற்றுத் தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
37 minute ago
1 hours ago
2 hours ago