2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

​கொஞ்சம் கேளுங்கள்

Editorial   / 2022 செப்டெம்பர் 16 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சில முக்கியமான ஆவணங்கள், நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை பத்திரமாக வைக்கவேண்டும் என நினைத்து, கைக்கெட்டிய தூரத்திலேயே வைத்துவிட்டு, தேவைப்படும் நேரத்தில், வைத்த இடத்தையே மறந்து, வீட்டையே பலரும் புரட்டிவிடுவர்.

அதேபோல, பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வோர், பணப்பையை   இல்லையேல் பயணப்பையை எடுத்து, ஒவ்வொரு பொக்கட்டுகளிலும் ஏதாவது தேடிக்கொண்டிருப்பர். சிலர் இறங்கும் வரையிலும் தேடியதை அவதானித்து இருக்கலாம்.

அந்த பஸ், மட்டக்குளியை நோக்கி பயணிக்க வேண்டிய 145 வழித்தட தனியார் பஸ், கொழும்பு கங்காராமையில் இருந்து புறப்பட்டு கொழும்பு துறைமுக வாயிலுக்கு அருகிலுள்ள தரிப்பிடத்தில் நின்றது.

வியாழக்கிழமை (15) இரவு 7.45  மணியிருக்கும்   ஓரளவுக்கு சில ஆசனங்கள் வெறுமையாக இருந்தன. எனினும், பயணிகள் பலரும் முண்டியத்துக்கொண்டு ஏற முயன்றனர்.

பின்கதவு பக்கமாக நின்றிருந்த பஸ் நடத்துனர், முன் கதவுக்கு அருகில் வந்து, ‘கொஞ்சம் கேளுங்கள்’ என விளித்து அறிவுரை கூறினார்.

உங்களுடைய பணப்பை, பயணப்பை, அலைபேசி உள்ளிட்ட முக்கியமானவற்றை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். இன்றைக்கு மட்டும் மூன்று சம்பவங்கள் 145 பஸ்களில் இடம்பெற்றுள்ளன. என விளங்கப்படுத்தினார்.

எனினும், சிலர் பைகளை முதுகில் அணிந்துகொண்டு முண்டியடித்தனர். சற்று கடுப்பான நடத்துனர். ஏனைய பயணிகளுக்கு இடம் கொடுத்து, அந்தப் பைகளை, பஸ் இறாக்கையில் வைத்து பாதுகாத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

பயணிகளிடம் இருந்து பயணக்கட்டணங்களை வாங்கிக்கொண்டே அறிவுரையை தொடர்ந்த நடத்துனர் ,’ கடந்த மூன்று நாட்களில் பலரும் பெறுமதியான அலை​பேசிகள், பணப்பைகளை இழந்துவிட்டனர். இன்று பகல் கூட, இளைஞன் ஒருவர் தனது பயணப்பையை இழந்துவிட்டார். அதில், முக்கியமான ஆவணங்களும் இருந்தன.

ஆகையால், (பரிசங்கரகண்ட) பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள் என் கூறிக்கொண்டே இருந்தார். அவ்விடத்தில் பஸ் ஒரு பத்து அல்லது 15 நிமிடங்கள் தரித்து நிற்கும்.

எனினும், யாரோ ஒருவர் ‘டிங்’ என மணியை தட்டுவிட்டார். கடுப்பான நடத்துனர். யார் மணியை அடித்தது, அவ​ர் இறங்கி செல்லலாம் எனக் ​கடுந்தொனியில் கூறினார்.

சில நிமிடங்களில் பஸ் அங்கிருந்து புறப்பட்டு, மாலுக்கடை, கொச்சிக்கடை, சிவன்கோவில் ஆகிய இடங்களிலுள்ள பஸ் தரிப்பிடங்களில் தரித்துநின்று, பயணிகளை இறக்கி ஏற்றியது.

அப்போதெல்லாம், பேஸ் பரிசங்கரகண்ட (பணப்பையை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்) என நடத்துனர் மட்டுமன்றி, சாரதியும் கூறிவந்தனர்.

காற்சட்டையின் பின் பொக்கட்டில் வைத்திருந்த ஆண்கள், முன் பொக்கட்டில் பணப்பையை மாற்றி வைத்துக்கொண்டனர். இன்னும் சிலர் தட்டிப்பார்த்துக்கொண்டர். பெண்களில் பலரும் தங்களுடைய ​தோல் பட்டையில் தொங்கிய ஹேன் பேக்கை, இழுத்து முன்பக்கமாக வைத்துக்கொண்டனர்.

ஆக, பஸ்களில் ஏறும் முன்னரே, பயணத்தூரத்துக்கான கட்டணத்தை எடுத்து வைத்துக்கொண்டால், பயணித்தின்போது பயணப்பைகளை வெளியில் எடுக்கவேண்டிய தேவையில்லை. வீணான இழப்புகளுக்கும் முகங்கொடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X