Editorial / 2017 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
நீர்கொழும்பு - கொச்சிக்கடை - தளுவகொட்டுவ பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவரை, நீர்கொழும்பு பிரதேசத்தில் வைத்து நேற்று (07) கைது செய்துள்ளதாக, கொச்சிக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளாதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கடந்த 2ஆம் திகதி கொச்சிக்கடை - தளுவகொட்டுவ பிரதேசத்தில் உள்ள வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் தங்க நகை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர் ஒருவரிடம் கைத்துப்பாக்கியைக் காட்டி, 21 இலட்சத்து 21 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் தங்க நகை என்பவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட வர்த்தகர் கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக ௯றப்படும் பிரதான சந்தேக நபர் ஒருவரை, கைதுசெய்தனர்.
குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஐவரின் விவரங்களும், கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட வேன் பற்றிய விவரமும் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
7 minute ago
42 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
42 minute ago
47 minute ago