Editorial / 2017 செப்டெம்பர் 12 , பி.ப. 03:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(படம்: தமித் விக்கிரமசிங்க)
சில் ஆடை வழங்கிய விவகாரம் தொடர்பில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு அதிசொகுசு ஹோட்டல்களில் இருந்து சீன உணவுகள் வழங்கப்படுவதாக, பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னாள் இன்று (12) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“600 மில்லியன் ரூபாயைக் கொள்ளையடித்தவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீதிமன்றத்துக்கு வருவார்கள். தீர்ப்பு வழங்கியவுடன் அவர்களுக்கு நோய் வந்துவிடுகிறது. இவ்வாறு நோயை வைத்துக்கொண்டு இவர்கள் எவ்வாறு அரசாங்க சேவை ஆற்றினார்கள் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். மேலும், பீ.எம்.டப்ளியூ சங்கத்தினர் திருடர்களைக் காப்பாற்ற நிதி சேகரிக்கின்றனர்” எனவும் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago