Gavitha / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை சிறுவர்நல விசேட மருத்துவர்கள் சங்கத்தின் 19ஆவது வருட பொதுக்கூட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (11) பிற்பகல் காலிமுகத்திடல் ஹொட்டலில் நடைபெற்றது.
சிறுவர் நோய்களைக் கண்டறிவதற்கும் அந்நோய்களைக் குணப்படுத்துவதற்காகவும் முக்கிய பங்களிப்புகளை வழங்கிய வைத்தியர்களை கௌரவிக்கும் வகையில், பேராசிரியர் ஆசிரி குணவர்த்தனவுக்கும் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வைத்தியர் அமித் குப்தாவுக்கும் வைத்தியர் ஸ்ரீனிகா குலரத்னவுக்கும் ஜனாதிபதியால் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, இலங்கை சிறுவர் நல விசேட வைத்தியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ரம்யா த சில்வா, செயலாளர் வைத்தியர் சுரன்த பெரேரா ஆகியோர் உள்ளிட்ட அச்சங்கத்தின் சுமார் 500 உறுப்பினர்கள் பங்குபற்றினர்.
மேலும் தென்காசிய ஐக்கிய நாளமில்லா சுரப்பிகள் சங்கமும் (SAFES) இலங்கையின் நாளமில்லா சுரப்பிகள் சங்கமும் (Endocrine society of sri lanka) ) இணைந்து ஒழுங்கு செய்திருந்த நாளமில்லா சுரப்பிகள் விஞ்ஞானத் துறை தொடர் கொழும்பு கலதாரி ஹொட்டலில் நடைபெற்றது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago