2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

சூழல் பாதுகாப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம்

Gavitha   / 2016 மார்ச் 09 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.யூ.எம். சனூன்

வடமேல் மாகாண கல்வி அமைச்சு பிரகடனப்படுத்திய சூழல்  பாதுகாப்பு தினத்தையொட்டி புத்தளம் சாஹிரா தேசிய கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஊர்வலம் செவ்வாய்க்கிழமை (08)  காலை இடம்பெற்றது.

போதை பாவனையிலிருந்து பொது மக்களை பாதுகாத்தல், சுத்தமான நகராக நகரை பாதுகாத்தல், டெங்கு ஒழிப்பை வலியுறுத்தல், சிறுவர் துஸ்பிரயோகத்தை ஒழித்து கட்டுதல் போன்ற கோஷங்களை முன் வைத்ததாக இந்த விழிப்புணர்வு  ஊர்வலம் இடம்பெற்றது.

புத்தளம் வலய கல்வி பணிமனையின் தமிழ் பிரிவுக்கான பிரதி கல்வி பணிப்பாளர் இசட்.ஏ. சன்ஹீரின் வழிகாட்டலில் கல்லூரி முதல்வர் எஸ்.ஏ.சி. யாக்கூப் மற்றும் பகுதி தலைவர்கள் உள்ளிட்ட க.பொ.த. உயர் தரம் பயிலும் சகல மாணவர்களும் இந்த  ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

சாஹிர கல்லூரியிலிருந்து புறப்பட்ட ஊர்வலம் புத்தளம் மன்னார் வீதி,  பிரதான சுற்று வட்டம், தபால் நிலைய சந்தி, போல்ஸ் வீதி, மரிக்கார் வீதி, வெட்டுக்குளம் வீதி ஊடாக  கல்லூரியை வந்தடைந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X