2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

சிரேஷ்ட எழுத்தாளர்கள் கௌரவிப்பு

Editorial   / 2017 ஜூலை 21 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனமும் கொடகே புத்தக வெளியீட்டு நிறுவனமும் இணைந்து நடத்திய கொடகே சிரேஷ்ட எழுத்தாளர் கௌரவிப்பு நிகழ்வு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில், நேற்று (20) பிற்பகல் நடைபெற்றது.

சிரேஷ்ட எழுத்தாளர்கள் 15 பேருக்கு ஜனாதிபதியால் கௌரவ விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன. இந்த நிகழ்வுடன் இணைந்ததாக, பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட 'பிரச்சினைக்குத் தீர்வு' என்ற போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் ஜனாதிபதியால் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன.

சிரேஷ்ட எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் நான்காவது முறையாக நடைபெறும் இந்த கௌரவிப்பு விழாவில் அனைத்து இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன, ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ் சமரதுங்க, ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுதர்ஷன குணவர்தன, பணிப்பாளர் நாயகம் எரானந்த ஹெட்டியாரச்சி, கொடகே புத்தக வெளியீட்டு நிறுவனத்தின் தலைவர் சிறிசுமன கொடகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X