Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 08 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
மஹர சிறைச்சாலையிலிருந்து, சிறைக் கைதிகளை ஏற்றி வந்த சிறைச்சாலை பஸ், எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில், நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம், நேற்று இரவு 9.45 மணியளவில் நீர்கொழும்பு நிக்கலஸ் மார்க்கஸ் மாவத்தையில் இடம்பெற்றுள்ளது. பாதாள உலக கோஷ்டியைச் சேர்ந்த கைதிகள் சிலரை, பாதுகாப்புக் காரணங்களுக்காக, இரவு வேளையில் அழைத்துவரப்பட்டபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகிறது.
இந்த விபத்தில், ஒரு மாதத்துக்கு முன்னர் திருமணமான, முன்னக்கரை சாந்த நிகுலா வீதியைச் சேர்ந்த குருகுலசூரிய ரொஷான் பெர்ணான்டோ (28 வயது) என்ற நபரே உயிரிழந்துள்ளதுடன், அதே பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீமால் ரொஷான் பெர்ணான்டோ (28 வயது) என்பவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை பஸ் வண்டியை செலுத்தி வந்த சாரதியை நீர்கொழும்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். சடலம், நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
1 hours ago