Princiya Dixci / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

பௌத்த பிக்குமார்களுக்கான பிரிவெனாக் கல்வி முறையை வலுப்படுத்தி, அதன் முன்னேற்றத்துக்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆற்றப்படும் பணிகள், தேசிய பௌத்த புத்தி ஜீவிகள் சபையில் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளன.
ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதியின் தலைமையில், தேசிய பௌத்த புத்தி ஜீவிகளின் சபை, செவ்வாய்க்கிழமை (31) பிற்பகல் ஒன்றுகூடிய சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
பிரிவெனா கல்வியை முன்னேற்றி அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஜனாதிபதியின் ஆலோசனையின்படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள செயற்றிட்டங்கள் குறித்து பிரிவெனா பணிப்பாளர் பேராசிரியர் வண. நாபிரித்தன்கடவர ஞானரத்தன தேரர், ஜனாதிபதியிடம் தனது நன்றியைத் தெரிவித்தார்.
விகாரைகளை மையப்படுத்திய பேண்தகு அபிவிருத்தி செயற்றிட்டம் ஒன்றினை உருவாக்குதல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன், சர்வதேச வெசாக் உற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் சர்வதேச பௌத்த சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
தஹாம் பாசல (அறநெறிப் பாடசாலை) கல்வி முறைக்கான விடயதானத்தை அபிவிருத்தி செய்தல் மற்றும் முறைமைப்படுத்தல் தொடர்பாகவும் அவதானம் செலுத்தப்பட்டதுடன், எமது எதிர்கால சந்ததியினரை சிறந்தவொரு சமூதாயமாகக் கட்டியெழுப்புவதற்கு தஹாம் பாடசாலை கல்வியினை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.
28 minute ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
18 Jan 2026