Editorial / 2017 ஜூலை 29 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 5 வயது சிறுமி ஒருவர், வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பலனின்றி மரணமாகியுள்ளார்.
நீர்கொழும்பு, லாஸரஸ் வீதியைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியே மரணமடைந்தவராவார்.
சிறுமி, பாலர் பாடசாலையில் கற்கும் மாணவியாவார். இவருக்கு 3 வயதில் சகோதரர் ஒருவர் உள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் சிறுமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நீர்கொழும்பு பெரியமுல்லையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலை கடும் சுகயீனமுற்ற நிலையில் சிறுமி, நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் மரணமாகியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .