2025 நவம்பர் 19, புதன்கிழமை

தாக்குதலுக்குள்ளான நிக்கவரட்டிய பள்ளிவாசலுக்கு மஸ்தான் எம்.பி. விஜயம்

Princiya Dixci   / 2016 நவம்பர் 09 , மு.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனவாதிகளால், கடந்த திங்கட்கிழமை, பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுத் தாக்குதலுக்குள்ளான குருநாகல், நிக்கவரட்டிய பள்ளிவாசலுக்கு, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான், செவ்வாய்க்கிழமை (08) இரவு, விஜயம்செய்து, சம்பவம் தொடர்பில் ஆராய்ந்தார்.

பள்ளிவாசல் நிர்வாகத்துடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர், பள்ளிவாசலுக்கான பாதுகாப்பை வழங்குதல் தொடர்பாகவும் இனிவரும் காலங்களில் இவ்வாறான நாசக்காரச் செயல்கள் நடைபெறாமல் இருக்கவும் தம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்குவதாகத் தெரிவித்தார்.

இச் சம்பவம் தனக்கு மிகவும் கவலை அளிப்பதாகத் தெரிவித்த அவர், ஜனாதிபதிக்கு இது தொடர்பில் தெரிவிக்கவுள்ளதாகவும் இவ்வாறான சம்பவங்களினூடாக, மூலம் நாட்டையும் நல்லாட்சியையும் சீர்குழைக்க நினைப்பவர்களுக்குச் சிறந்த பாடம் விரைவில் புகட்டப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X