Princiya Dixci / 2016 மார்ச் 30 , மு.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்கொட்டுவ பிரதேசத்தில் பால் தேநீPர் தயாரிக்க முயன்ற 11 வயதுச் சிறுவன், கடந்த திங்கட்கிழமை (28) மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளான்.
தங்கொட்டுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தரம் ஆறில் கல்வி கற்கும் அதே பிரதேசத்தைச் சேர்ந்த மல்லிக ஆராச்சிகே செனால் தேசான பெரேரா என்ற சிறுவனே இவ்வாறு பலியாகியுள்ளான்.
சம்பவம் தினம் தந்தை, பகல் உணவுக்காக வேலையிலிருந்து வீட்டுக்கு வந்துள்ளார். பாடசாலை முடிவடைந்து வீட்டுக்கு வந்த மகனுடன் கதைத்து விட்டு தந்தை மீண்டும் தொழிலுக்குச் சென்றுள்ளார். பகல் உணவை உட்கொண்ட சிறுவன் பால் தேநீர் அருந்துவதற்காக ஹீட்டரைப் பயன்படுத்தி தண்ணீரைச் சூடாக்க முயற்சிக்கும் போது சிறுவனை மின்சாரம் தாக்கியுள்ளது.
சம்பவத்தை அடுத்து உடனடியாக சிறுவன் தங்கொட்டுவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
4 minute ago
56 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
56 minute ago
2 hours ago