Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Niroshini / 2017 ஜனவரி 23 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை துறைமுகத்தின் பொறுப்பை, இந்தியாவுக்கு வழங்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக, பிரதேச அபவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்களை, இந்திய அரசாங்கம் மறுத்துள்ளது.
திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம், விரைவில் பூர்த்தி செய்யப்படும் என, அமைச்சர் சரத் பொன்சேகா, ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சுவிட்ஸர்லாந்து விஜயத்தின் போது, இந்திய ஊடகம் ஒன்றை சந்தித்த வேளை, திருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில், இந்தியாவுடன் கலந்துரையாடியதாகவும் அவர் கூறியிருந்தார்.
எது எவ்வாறாயினும், குறித்த ஒப்பந்தத்துக்கு இந்தியா தயாராகவில்லை என, இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளதாக, நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம், செய்தி வெளியிட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கும் திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கும் வழங்கி, இராஜதந்திர ரீதியில் இரு நாட்டு உறவுகளையும் சமமாகப் பேண, இலங்கை அரசியல்வாதிகள் முற்பட்டாலும், அந்த ஒப்பந்தத்துக்கு இந்தியா தயாரில்லை என, இந்தியா குறிப்பிட்டுள்ளதாக, அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், திருகோணமலை துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் ஒப்பந்தங்களை மேற்கொள்வதனால், நீண்டகால அடிப்படையில் பெரும் நன்மைகள் கிட்ட வாய்ப்பில்லை என இந்தியா கருதுவதாகவும், நியூ இந்தியன் என்ஸ்பிரஸ் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பையும் இதே காரணத்துக்காகத் தான் இந்தியா மறுத்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
7 hours ago