2025 மே 06, செவ்வாய்க்கிழமை

திருட்டுகளுடன் தொடர்புடையவர் கைது

Princiya Dixci   / 2016 ஜனவரி 26 , மு.ப. 07:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருட்டுச் சம்பவங்கள் பலவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபரை, பாணந்துறை புகையிரத நிலையத்துக்கு அருகாமையில் வைத்து, பாணந்துறைப் பொலிஸார், திங்கட்கிழமை (25) கைதுசெய்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர் தொடர்பில், மீரிகம, கம்பஹா, இராகம, அநுராதபுரம் மற்றும் றம்புக்கனை ஆகிய 05 பொலிஸ் நிலையங்களில் முறையே 02, 05, 04, 02 மற்றும் 01 முறைப்பாடுகளாக 14 முறைப்பாடுகள் உள்ளதாகவும், அது தவிர கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 03 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேகநபர், வேயாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேயாங்கொடை மற்றும் கொரச ஆகிய நகரங்களிலுள்ள 04 அலைபேசி விற்பனை நிலையங்களில் கொள்ளையிட்டுள்ளதாகவும் அங்கிருந்து திருடப்பட்ட 14 அலைபேசிகளையும், மடிக்கணினி உட்பட தொலைத்தொடர்பு சாதனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், வேறு இடங்களிலிருந்து திருடப்பட்ட 15 அலைபேசிகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபரை, வேயாங்கொடைப் பொலிஸார் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே, பாணந்துறைப் பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X