Niroshini / 2017 ஜனவரி 22 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை துறைமுகத்தை, இந்தியாவுக்கு வழங்கப்படுமானால், அது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என, மக்கள் விடுதலை முன்னணியின் பிரதம செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
திருகோணமலை துறைமுகத்தை இந்தியாவுக்கு வழங்கவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் ஊடகமொன்றுக்கு வழங்கப்பட்ட செவ்வி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த டில்வின் சில்வா, “நாட்டிலுள்ள பெறுமதியான வளங்களை விற்பனை செய்து, நாட்டில் காணப்படும் பிரச்சினைகளை தீர்க்க, தற்போதைய அரசாங்கம் முயற்சித்து வருகிறது” என்றார்.
இதேவேளை இவ்விவகாரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஓய்வூபெற்ற இராணுவ அதிகாரி கேணல் சுசந்த செனவிரத்ன கூறுகையில், “திருகோணமலை துறைமுகத்தின் முக்கியத்துவத்தை, இலங்கை இதுவரை அடையாளம் காணவில்லை. திருகோணமலை துறைமுகம் தொடர்பில், முன்பிருந்தே இந்தியா அவதானம் செலுத்தி வந்திருந்தது” என்றார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago