Editorial / 2018 மே 21 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
சட்டவிரோதமான முறையில், நாட்டுக்குள் தங்கத்தை கடத்துவதற்கு முயன்ற மூவரை, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப் பிரிவு அதிகாரிகள் இருவேறு சந்தர்ப்பங்களில் கைதுசெய்துள்ளனர்.
அந்த மூவரிடமிருந்தும் 61 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதானவர் என்றும், மற்றைய இருவரில் ஒருவர் மாத்தறையைச் சேர்ந்தவர் (வயது 55) என்றும், மூன்றவது நபர், மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் (வயது 52) என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மூவரில் ஒருவர், தாய்லாந்து பெங்கொக்கிலிருந்து வந்த, ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான, யு.எல்-407 என்ற விமான நிலையத்தில், நேற்று முற்பகல் 11:55க்கு, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அவர், தான் அணிந்திருந்த காற்சட்டையின் பொக்கெட்டுக்குள் வைக்கும் பண பைக்குள், 200 கிராம் நிறைகொண்ட, தங்கத் துண்டுகளை மறைத்துவைத்து எடுத்து வந்துள்ளார். அதன் பெறுமதி, 13 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவாகும்.
மற்றைய இருவரும், சிங்கபூரிலிருந்து வந்த எமிரேட்ஸ் விமானச் சேவைக்கு சொந்தமான ரி.கே.-349 என்ற விமானத்தில் இன்று (21) அதிகாலை 1:55க்கு வந்துள்ளனர்.
அவர்களில் ஒருவர், தன்னுடைய முழங்காலில், விசேடமான கவர்களை பயன்படுத்தி, அதற்குள் தங்கத் துண்டுகளை மறைத்துவைத்து எடுத்துவந்துள்ளார்.
மற்றையவர், தான் அணிந்திருந்த பாதணிகளில், காலுறைகளுக்கு இடையில் மறைத்துவைத்து, தங்கத்துண்டுகளை கொண்டுவந்துள்ளார்.
அவர்கள் இருவரிடமிருந்து 700 கிராம் நிறைகொண்ட, 5 தங்கத்துண்டுகள் மீட்கப்பட்டன. அவற்றின் பெறுமதி, 47 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவாகும்.
மூவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 900 கிராம் நிறைகொண்ட தங்கத்துண்டுகளின், இலங்கை பெறுமதி, 61 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயென மதிப்பிடப்பட்டள்ளது என்று சுங்கத்திணைக்கத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
20 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
2 hours ago