2025 மே 05, திங்கட்கிழமை

தடுப்புக் காவலில் இருந்த யுவதி வல்லுறவு

Yuganthini   / 2017 ஜூன் 20 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிரிஹானவில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வுத் திணைக்கள தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 21 வயது நிரம்பிய மியன்மார் யுவதியை, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.

இச்சம்பவம், கடந்த 17ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

குறித்த யுவதி, சுகவீனமடைந்தக் காரணத்தினால் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தடுப்புக் காவலில் ஏற்பட்ட நட்பின் அடிப்படையில், பாதுக்க பொலிஸ் நிலையத்தில் கடயைமாற்றி வரும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குறித்த யுவதியை பார்வையிட வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர் பொலிஸ் கான்ஸ்டபிள் குறித்த யுவதியை வெளியே அழைத்துச் சென்று, தற்காலிக விடுதி ஒன்றில் வைத்து பாலியல் துஸ்பிரயோகத்துக்கட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X