Princiya Dixci / 2016 மார்ச் 14 , மு.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வு, கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நாளை செவ்வாய்க்கிழமை (15) மாலை 5.30க்கு இடம்பெறவுள்ளது.
ஒன்றியத் தலைவர் அ.நிக்ஸன் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்வில் மொறீசியஸின் முன்னாள் தூதுவரும் பிரபல தொழிலதிபருமான ஈஸ்வரன், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
இந்த நிகழ்வில் எழுத்தாளர் உமா வரதராஜன், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் லஸந்த ருகுணுகே ஆகியோர் சிறப்புரை ஆற்றவுள்ளனர்.
நிகழ்வை இராமானுஜம் நிர்ஷன் தொகுத்து வழங்குவார்.
ஒன்றியத்தின் உறுப்பினர்கள் உட்பட அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயற்குழு அழைப்பு விடுத்துள்ளது.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago