Freelancer / 2022 மார்ச் 08 , மு.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ரீ தலதா பெரஹராவில் புனித தந்ததாது கலசத்தை சுமந்து செல்லும் இலங்கையின் மிகவும் உயரமான யானையான நெதுன்கமுவே ராஜா ஹஸ்திராஜயா, நேற்று (07) அதிகாலை 5.30 மணியளவில் கம்பஹா, வெலிவேரிய நெதுன்கமுவில் வைத்து மரணமடைந்தது.
69 வயதான நெதுன்கமுவே ராஜா, மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
1953 ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்த ராஜா, தனது ஐந்தாவது வயதில் இலங்கைக்கு அழைத்து கொண்டுவரப்பட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு முதல் 13 வருடங்களாக கண்டி பெரஹராவின் புனித கலசத்தை சுமந்து சென்றுள்ள நெதுன்கமுவே ராஜா, கலசத்தை அதிக முறை சுமந்து சென்ற யானையாக அறியப்படுகிறது.
கடந்த வருடம் இடம்பெற்ற கண்டி எசல பெரஹராவின் போது, நெதுன்கமுவே ராஜா நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நெதுன்கமுவே ராஜா ஹஸ்திராஜயாவை தேசிய பொக்கிஷமாக பிரகடனப்படுத்துமாறு, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
எதிர்கால சந்ததியினரின் பார்வைக்காக நெதுன்கமுவே ஹஸ்திராஜயாவின் உடலைப் பாதுகாக்குமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
தேசிய அருங்காட்சியக அதிகாரிகள் குழுவொன்று அதற்காக ஹஸ்திராஜயா இருந்த கம்பஹா வெலிவேரிய நெதுன்கமுவ பகுதிக்குச் சென்றுள்ளனர்.
1 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
21 Dec 2025