Gavitha / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாநூ கார்த்திகேசு
எமது நாட்டில் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை ஊழியர்களுக்கான வெற்றிடங்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவில் உள்ளதாகவும் அதனைப் பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் என்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் ஹிசித்த திலகரத்ன தெரிவித்தார்.
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையில் நேற்று செவ்வாய்க்கிழமை (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையினால் சுற்றுவளைப்புச் சம்பவங்கள் மாத்திரம் மேற்கொள்ளப்படுவதில்லை. பாவனையாளர்களுக்கான அறிவுறுத்தல் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றது' என்று தெரிவித்தார்.
'வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மீளக்குடியேற்றப் பிரதேசங்களில், நுகர்வோர் தொடர்பில் அறிவித்தல் தொழிற்பாட்டை மேற்கொள்வதற்கான ஊழியர்கள் குறைந்தளவிலேயே உள்ளனர். இதனால், இப்பகுதியிலுள்ள பெருமளவிலான நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர். இக்குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் ஊழியர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும்' என்றும் அவர் கூறினார்.
'கடந்த காலங்களில் பொருட்களின் தரம் குறித்து நுகர்வோர் அலுவல்கள் அமைச்சானது, சிறப்பான முறையில் செயற்படுவதாகவும் இம்மாத ஆரம்பத்திலிருந்து 15ஆம் திகதிக்குள் மாத்திரம் 926 சுற்றிவளைப்புச் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் 1,023 வழக்குகள் நீதி மன்றங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன' என்றும் அவர் கூறினார்.
'நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் சில சில திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும். தரம் குறைந்த பொருளொன்று நுகர்வோருக்கு விற்கப்படுகின்ற பட்சத்தில் அதற்கெதிராக விதிக்கப்படும் தண்டப்பணத்திலுள்ள ஏற்ற இறக்கங்கள் குறித்து இத்திருத்தத்தில் உள்ளடக்க வேண்டும். இதனை எதிர்வருங்காலங்களில் மேற்கொள்ளவுள்ளோம்' என்று அவர் மேலும் கூறினார்.
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago