2025 நவம்பர் 19, புதன்கிழமை

நட்டஈடு வழங்கவில்லை

Kogilavani   / 2017 பெப்ரவரி 24 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஜே.ஏ.ஜோர்ஜ்
தெற்கு மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை செயற்றிட்டத்துக்கு சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களின் காணிகளுக்கு உரிய வகையில, அரசாங்கம்; நட்டஈடு வழங்கவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

'மத்திய அதிவேக நெடுஞ்சாலை மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு, மக்களின் காணிகள் பலவந்தமாக அபகரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு நட்டஈடு வழங்க அரசாங்கத்திடம் எந்தவொரு முறையும் இல்லை. இன்று அந்த மக்கள் வீதிக்கு இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்' என்றார்.

அதற்கு பதிலளித்த நெடுஞ்சாலை அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல,

'மஹிந்த ஆட்சிக் காலத்தில் அபிவிருத்தி பணிகளுக்கு பெற்றுக் கொள்ளப்படும் நிலங்களுக்கு நட்டஈடு பெற்றுக்கொடுக்கும் நடைமுறையே முன்னெடுக்கப்படுகின்றது. எனினும், நட்ட ஈடு கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது, என்றார்.

அதன்போது கருத்து தெரிவித்த விஜித ஹேரத்,

' வெளிநாட்டு பிரஜைகளுக்கு இடம் குத்தகைகு வழங்க வரிச்சலுகை வழங்க தீர்மானித்துன்ன அரசாங்கம் இலங்கை மக்கள் மீது வரிச்சுமையை அதிகரித்துள்ளது. மேலும் 99 அல்லது அதன் இருமடங்கு காலத்துக்கு வெளிநாட்டவர்களுக்கு குத்தகைக்கு கொடுக்க நாடாளுமற்றில் இரண்டில் மூன்று பெரும்பான்மை பெறவேண்டும். ஆனால் அதனை செய்யவில்லை என்றார்.

அதற்கு பதிலளித்த லக்ஸ்மன் கிரியெல்ல,
கடந்த அரசாங்கம் எத்தனை நாடுகளுக்கு எவ்வளவு நிலத்தை வழங்கியுள்ளது. இதற்கு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெற்றா செய்தீர்கள். அந்த நாடுகளில் பெயரை சபையில் சொல்வது சரியில்லை. ஏனென்றால் இப்போது அந்த நாடுகள் எமக்கு உதவிகளை வழங்கி வருகின்றன' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X