2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

நிர்மாணப் பணிகள் தாமதிக்காது: நிமல்

Freelancer   / 2022 ஜூன் 26 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சுஜித் ஹெவாஜூலியால்)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் தாமதிக்கப்படமாட்டாது என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை தனியாரிடம் ஒப்படைக்கவே மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

கொழும்பு துறைமுகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும்  ECT  முனையத்தின் நிர்மாணப் பணிகளை கடந்த 25ஆம் திகதி பார்வையிட்ட பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையமும், அதன் செயற்பாடுகளும் துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான முனையமாக முழுமையாக செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குறுகிய அரசியல் இலாபங்களுக்காக சில தொழிற்சங்கங்களும், தனிநபர்களும் இந்த முனையம் தொடர்பில் வெளியிடப்படும் பொறுப்பற்ற அறிக்கைகளை நிராகரிப்பதாகவும் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .