2025 நவம்பர் 19, புதன்கிழமை

நிர்வாகக் கட்டடத்துக்கான ஒப்பந்தம் இ.பொ.கூவிடம்

Editorial   / 2017 ஜூன் 28 , பி.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை பொது வைத்தியசாலையின் நிர்வாகக் கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை, இலங்கைப் பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று  நடைபெற்றபோதே, அவர் மேற்கண்ட விடயத்தைத் தெரிவித்தார்.

களுத்துறை பொது வைத்தியசாலையின் நிர்வாகக் கட்டடடம் அமைப்பதற்கான கட்டம் - 11இற்கான ஒப்பந்தமே, இலங்கைப் பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கப்படவுள்ளது.

சுகாதாரம், போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித்த சேனாரத்னவினால் முன்வைக்கப்பட்ட மேற்படி யோசனைக்கே,  அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ள நிலையான கொள்ளல் குழுவின் பரிந்துரை மற்றும் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரை ஆகியவற்றுக்கு அமையவே, இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X