2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2022 ஓகஸ்ட் 29 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷாஜஹான்

மண்ணெண்ணெய்யை வழங்குமாறு கோரி நீர்கொழும்பு மீனவர்கள் இன்று (29)  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்ணெண்ணெயை விநியோகிக்குமாறும், அதிகரித்த விலைக்கு அல்லாமல் பழைய விலைக்கு மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும் என்று கோரியும் நீர்கொழும்பு மீனவர்கள் கடந்த  இரண்டு வாரங்களுக்கு மேலாக நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில் ரயில்வே கடவை அருகில் வீதியோரத்தில் கொட்டகை அமைத்து தங்கியிருந்து எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

நீர்கொழும்பு -  கொழும்பு பிரதான வீதியில் இன்றைய தினம் பகல் 12 மணியளவில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுலோக அட்டைகளையும் பதாகைகளையும் ஏந்தியிருந்ததோடு அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

தாங்கள் கடந்த மூன்று நான்கு மாதங்களாக கடத்தொழிலுக்கு செல்லவில்லை எனவும் எரிபொருள் இல்லாமையே இதற்கு பிரதான காரணம் எனவும் அவர்கள் தெரிவித்ததோடு தமது பிள்ளைகள் பசி பட்டினியோடு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

தமக்குரிய மண்ணெண்ணெயை பழைய விலையிலே தரப்பட வேண்டும். தேவையான அளவு மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும் என்பதே மீனவர்களுடைய பிரதான கோரிக்கையாக இருந்தது.

தமது  வேண்டுகோளை நிறைவேற்றும் வரை தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அபிற்பகல் 1.15 மணியளவில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து கொண்டனர்.

இதேவேளை, இன்று பிற்பகல் 2 மணி அளவில் மீனவர் சங்கத் தலைவர்களையும் பிரதிநிதிகளையும் அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளதாகவும் மீனவர் சங்கத் தலைவர் அருண ரொசாந்த தெரிவித்தார்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X