Editorial / 2017 ஓகஸ்ட் 19 , மு.ப. 11:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு - குரணை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவரையும், எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீர்கொழும்பு மேலதிக நீதவான் ஆர்.ஜி.என்.கே. ரன்கொத்கே நேற்று (18) உத்தரவிட்டார்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் சந்தேக நபர்களான, தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த வெலமெத கெதர அருணசாந்த, ராகமை பிரதேசத்தைச் சேர்ந்த அளுத்வத்தை கங்காணம்லாகே தரிந்து மதூச ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும், கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) இரவு நீர்கொழும்பு பதில் நீதவான் கருணா ஜீவ கமகே குணதாச முன்னிலையில் ஆஜர்செய்தபோது, 18ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு, நீதவான் உத்தரவிட்டார்.
இதையடுத்து, சந்தேக நபர்களை நேற்று நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோதே, நீதவான் சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்கள் இருவரும் துப்பாக்கிச்சூட்டின் காரணமாக காயமடைந்த நிலையில், தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago