Freelancer / 2022 ஓகஸ்ட் 24 , மு.ப. 11:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு வெளிவட்ட வீதியில் சப்புகஸ்கந்த பிரதேசத்தில் நேற்று (23) இரவு டைல்ஸ் ஏற்றப்பட்ட லொறியுடன் கொரிய மொழி ஆசிரியர் ஒருவர் பயணித்த சொகுசு ஜீப் மோதி விபத்துக்குள்ளானதில் ஜீப் ஓட்டுநருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் ,கொரிய மொழி ஆசிரியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அதுருகிரிய போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
கோனஹேன வீதி, கடவட, ரம்முத்துகல பகுதியைச் சேர்ந்த கிதானி மானெல் பிரியந்தி (வயது 47) என்ற ஒரு பிள்ளையின் தாயே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

டைல்ஸ் ஏற்றப்பட்ட லொறி மாத்தறையிலிருந்து கடவத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, அதே திசையில் பின்னால் வந்த சொகுசு ஜீப் லொறியின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறி மீது ஜீப் மோதியவுடன், அது குப்பைக் குவியலாக மாறியது, ஆசிரியர் அடையாளம் தெரியாத அளவுக்கு பலத்த காயமடைந்தார் என்று பொலிஸார் கூறுகின்றனர்.

கடவத்தை வெளியேறும் முகத்துவாரத்திலிருந்து சுமார் இரண்டு கிலோமீற்றர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜீப் சாரதியின் கவனக்குறைவு மற்றும் அதிவேகமே விபத்துக்கு காரணம் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
லொறியின் சாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
அத்துரிகிரிய போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தின் நிலைய கட்டளைத் தளபதி பிரதம பரிசோதகர் எம்.எஸ்.அசோககுமாரவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago