Princiya Dixci / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 11:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருமணம் செய்துகொள்வதாகக் கூறி, பல பெண்களை எமாற்றி, மாலைத்தீவுக்கு அழைத்துச்சென்று, அங்கு விபசாரத்தில் ஈடுபடுத்திய வர்த்தகர் ஒருவருக்கு, வெளிநாடு செல்லத் தடை விதித்து, கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டார்.
பத்தரமுல்லையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கே, இவ்வாறு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேகநபர், காலி மற்றும் மஹரகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த பெண்களை ஏமாற்றி, வெளிநாடுகளில் விபசாரத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில், அங்கிருந்து இலங்கைக்குத் தப்பி வந்த பெண்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு அறிவித்தயடுத்து, பணியகத்தின் பிரதிப் பொது முகாமையாளர், கடந்த டிசெம்பர் மாதம், இது தொடர்பாக முறைபாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டையடுத்து, குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை, கொழும்பு பிரதான நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, வெளிநாடு செல்வதற்கான தடையை நீதவான் விதித்தார்.
43 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
48 minute ago
1 hours ago
1 hours ago