2025 மே 06, செவ்வாய்க்கிழமை

புத்தாண்டை இலக்கு வைத்து சட்டவிரோத வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை

Princiya Dixci   / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசேட அதிரப்படையினர் மற்றும் சுங்க வரித் திணைக்கள அதிகாரிகள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 42 இலட்சம் ரூபாய் பெறுமதியான 580 போத்தல் வெளிநாட்டு மதுபான வகைகள், நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) மீட்கப்பட்டுள்ளன.  

இதன்போது, வியாபாரிகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கொழும்பு, ஜாவத்தை வீதியில் அமைந்துள்ள இலத்திரனியல் உபகரண விநியோக நிறுவனமொன்றிலிருந்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

புத்தாண்டை இலக்கு வைத்து இந்நபர்கள், வெளிநாட்டு மதுபான வகைகளை விற்பனை செய்து வந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இலத்திரனியல் பாகங்களை விநியோகம் செய்யும் போர்வையில் சட்டவிரோதமாக வெளிநாட்டு மதுபான வகைகளை சந்தேகநபர்கள் விற்பனை செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களையும் மதுபான வகைகளையும் கொழும்பு மதுவரித் திணைக்கள விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X