Niroshini / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
கொழும்பின் பிரபல போதைப் பொருள் வர்த்தகராக இருந்த காலஞ்சென்ற நோனக்காவின் மகள் மதாசாவின் அடியாட்களில் ஒருவரை, ஒன்றரை இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 15 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு - 14 பேர்கியூசன் வீதியைச் சேர்ந்த இம்தியாஸ் (வயது 30) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நோனக்கா என்பவர் கொழும்பில் பாரியளவில் போதைப் பொருள் வர்த்தகம் செய்து வந்தவராவார். அவர் இறந்த பிறகு அவரது மகள் மதாரா என்பவர் ( வயது 29) தாய் நடத்தி வந்த போதைப் பொருள் வியாபாரத்தை செய்து வருகிறார். இந்த போதைப் பொருள் வியாபாரம் கொழும்பு - தொட்டலங்க பகுதியில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள தொடர் மாடி வீட்டு தொகுதியில் மதாரா என்பவரினால் பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மதாராவின் கையாட்களில் ஒருவரான குறித்த நபரிடம் 5 கிராம் போதைப் பொருளை கொள்வனவு செய்வது போன்று நடித்து அவரை நீர்கொழும்புக்கு வரவழைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நபரை நாளை திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago