2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

பாதாள உலக தலைவர் கொலை; எழுவர் கைது

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 05 , மு.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.இஸட்.ஷாஜஹான்

கடந்த 24ஆம் திகதி படுகொலை செய்யப்பட்ட மினுவாங்கொட - உன்னாருவ பிரதேசத்தில் செயற்பட்டு வந்த பாதாள கோஷ்டியின் தலைவர் சுசந்த பிரடி சில்வா எனப்படும் பிரடியின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேரை, நீர்கொழும்பு பொலிஸார்,நேற்றுப் பிற்பகல் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மூன்றும் துப்பாக்கிகள் உள்ளிட்ட சில ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்

மினுவாங்கொட - உன்னாருவ பிதேசத்தைச் சேர்ந்த நிலந்த ஜயசிறி மென்டிஸ் (34 வயது), சந்தன என்று அழைக்கப்படும் தியாகுகே சிறியந்த பிரதீப் சிறிபால சில்வா (34 வயது), லலந்த என்று அழைக்கப்படும் தியாகுகே சுஜித் பிரசன்ன சில்வா (34 வயது), ரேந்த ஹந்திகே திலான் சமந்த சில்வா (32 வயது), விமானப்படையில் 12 வருடங்கள் சேவையாற்றிவிட்டு ஓய்வு பெற்ற பொல்கெட்டிய பேனதுவ, கொடகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த கோப்ரல் சிசிர குமார அழகக்கோன் (40 வயது), மினுவாங்கொடையைச் சேர்ந்த ரேந்த ஹந்திகே வசந்த பிரியலால் சில்வா (43 வயது) மற்றும் நீர்கொழும்பைச் சேர்ந்த இத்தமல்கொட முனசிங்க முனியான்சலாகே நிரஞ்சன் லக்மால் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொடகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த கோப்ரல் சிசிர குமார அழககோன் (40 வயது) என்பவரே பணத்தைப் பெற்றுக் கொண்டு, பாதாள கோஷ்டியின் தலைவர் பிரடி சில்வாவை கொலை செய்தவராவார் என விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பாதாள உலகத் தலைவர் பிரடிக்கும் நிலந்த மென்டிஷுக்கும் இடையில் வான் ஒன்றை வாங்கியமை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையே இக்கொலைச் சம்பவத்துக்குக் காரணம் என மேலும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் அறுவரை மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்திலும் ஆயுதங்களை வைத்திருந்த சந்தேக நபரை கட்டானை பொலிஸ் நிலையத்திலும் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X