Princiya Dixci / 2016 மார்ச் 01 , மு.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம். இஸட். ஷாஜஹான்
நீர்கொழும்பு, பெரியமுல்லை நலன்புரிச் சங்கத்தின் நீர்கொழும்புக் கிளையின் முதலாவது பொதுக்கூட்டம், நீர்கொழும்பு கிளைத் தலைவர் லாபிர் தலைமையில் நீர்கொழும்பு, zaiba garden மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்றது.
இதன்போது பெரியமுல்லை வாலிபர்களுக்கு தத்தமது பிரதேசங்களின் பொறுப்புக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
கடந்த ஜனவரி மாதம் இச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. தலைமைக் காரியாலயம் சவுதி அரேபியாவில் அமைந்துள்ளது. சவுதியில் வாழும் பெரியமுல்லையைச் சேர்ந்த வாலிபர்கள் முன்னெடுத்த முயற்சியாலேயே இச்சங்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதனைப் போன்று, கட்டார் மற்றம் குவைத் ஆகிய நாடுகளில் வசிக்கும் பெரியமுல்லை முஸ்லிம் வாலிபர்களால் கிளைக் காரியங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக இச்சங்கத்தின் தலைவர் ஜியாஸ் தெரிவித்தார்.
சங்கத்தின் பல்வேறு செயற்திட்டங்கள், பெரியமுல்லைப் பகுதியில் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago