Princiya Dixci / 2016 ஒக்டோபர் 13 , மு.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
புவிச்சரிதவியல் சுரங்க அகழ்வு பணியகத்தினால் மண் கொண்டு செல்வதற்கு வழங்கப்படும் அனுமதிப்பத்திரத்தைப் போலியாகத் தயாரித்து, மண் ஏற்றிச் சென்ற சாரதியை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீர்கொழும்பு பிரதான நீதவான், நேற்றுப் புதன்கிழமை உத்தரவிட்டார்.
கட்டானை ஹல்பே பிரதேசத்தைச் சேர்ந்த டி.எம்.பிரதீப் குமார (வயது 25) என்பவரே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவராவார்.
கொச்சிக்கடை மடம்பெல்ல பிரதேசத்தில் வைத்து கொச்சிக்கடை பொலிஸார், சந்தேகநபர், மண் ஏற்றிச் செலவதற்குப் பயன்படுத்திய அனுமதிப்பத்திரத்தைப் பரிசோதித்த போது அது போலியாக தயாரிக்கப்பட்ட அனுமதிப்பத்திரம் என்பது தெரிய வந்துள்ளது.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago