Princiya Dixci / 2016 நவம்பர் 13 , மு.ப. 06:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பில் இடம்பெற்ற விபத்தின் போது, இரண்டு போக்குவரத்துப் பொலிஸார் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட சாரதியை, எதிர்வரும் 25ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் கபில துஸ்ஸந்த உத்தரவிட்டார்.
நீர்கொழும்பு, பிட்டிபனையில் கடந்த ஒக்டோபர் மாதம் 29ஆம் திகதி இடம்பெற்ற விபத்தின் போது, மோட்டார் சைக்களில் வந்த இரண்டு பொலிஸாரை, காரொன்று மோதி விபத்துக்குள்ளாக்கியது. விபத்தை ஏற்படுத்திய காரைச் செலுத்தி வந்த சாரதியான ஹர்ஷ இந்திரஜித் வடுகே என்ற சாரதி, அதிக மதுபோதையில் இருந்த நிலையில் இதன்போது கைதுசெய்யப்பட்டார்.
இந்த விபத்தின் போது, இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆணமடுவையைச் சேர்ந்த அசோக்க லலித் யசநாயக்க (39 வயது), தங்கொட்டுவையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சமிந்த பண்டார (32 வயது) என்ற, இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் உயிரிழந்தனர்.
விபத்தில் மரணமான குறித்த பொலிஸார் இருவரும், மக்கள் மத்தியில் நற்பெயரைப் பெற்றிருந்ததாகவும், விசாரணை இன்னும் நிறைவுபெறவில்லை எனவும் மன்றில் தெரிவித்த நீர்கொழும்புப் பொலிஸார், சந்தேகநபருக்குப் பிணை வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
45 minute ago
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
18 Jan 2026