Kogilavani / 2017 மார்ச் 09 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்நாட்டுப் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தகவல் வழிகாட்டல்கள் உள்ளிட்ட புள்ளிவிவரங்கள் அடங்கிய இணையத்தளமொன்றை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் இலங்கைத் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகம் (ICTA) ஆகியன இணைந்து, ஆரம்பிக்கவுள்ளன.
விசேடமாக, பிள்ளைகள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் என்ற மூன்று தரப்பினருக்கும் தேவையான தகவல்களை உள்ளடக்கும் வகையில், இந்த இணையத்தளம் தயாராகி வருவதாக, ஐ.சி.டி.ஏ முகவரகம் தெரிவித்தது.
தற்காலத்தில் இடம்பெறும் அதிகளவான சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் துன்புறுத்தல்களைத் தடுக்கும் வகையிலான முழுப் பாதுகாப்பு, உபாயங்கள் மற்றும் பிள்ளைகள், பெற்றோர், ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தல் நடவடிக்கைகள், இவ்விணையத்தளத்தின் ஊடாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென, மேற்படி முகவரகம் மேலும் தெரிவித்தது.
18 Jan 2026
18 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Jan 2026
18 Jan 2026