Editorial / 2017 செப்டெம்பர் 05 , மு.ப. 11:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
உடம்பினுள் ஹெரோய்னை மறைத்து வைத்து நாட்டுக்குள் கடத்தி வந்த பாகிஸ்தான் பிரஜையை, எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீர்கொழும்பு மேலதிக நீதவான் ஆர்.ஜி.என்.கே. ரன்கோன்கே, நேற்று (04) உத்தரவிட்டார்.
பாகிஸ்தான் - லாஹூரைச் சேர்ந்த மொஹமத் அஸ்லம் (வயது 37) என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவினரால், கடந்த ஓகஸ்ட் மாதம் 26ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
தடுப்புக் காவல் உத்தரவு பெற்று நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த சந்தேகநபரின் உடம்பினுள், மறைத்து வைத்திருந்த 367 கிராம் ஹெரோய்ன் அடங்கிய 37 உருண்டைகளை, அதிகாரிகள் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
43 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
43 minute ago
48 minute ago