Editorial / 2017 ஓகஸ்ட் 15 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு - கட்டுவபிட்டிய பால்தி சந்தியில், மோட்டார் சைக்கிள் திருத்தம் செய்தல் மற்றும் உதிரிப்பாகங்கள் விற்பனை நிலையத்தில், தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம், நேற்று (14) இரவு 7.15 மணியளவில் இடம்பெற்றது.
இதனால், நிலையத்தில் திருத்தம் செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், உதிரிப் பாகங்கள் ஆகியன, தீயினால் எரிந்து நாசமாகியுள்ளன.
நீர்கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் படைப் பிரிவின் நான்கு வாகனங்கள், சம்பவ இடத்துக்கு வந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.
நீர்கொழும்பு பொலிஸார், சம்பவ இடத்துக்கு வந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதோடு, விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .