Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2017 செப்டெம்பர் 11 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு - பிட்டிபனை மகா வித்தியாலயத்தில் கடைமையாற்றும் பதில் அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டாம் என வலியுறுத்தி, இன்று (11) காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக, பிட்டிபனை பிரதேசத்தின் நீர்கொழும்பு, ஜா –எல வீதியில் தற்காலிகமாக வாகன போக்குவரத்து தடைப்பட்டது.
இந்தப் பாடாலையில் அதிபராகக் கடைமையாற்றி வந்த அருட் தந்தை ஓய்வு பெற்றுச் செல்லும் போது, பிரதி அதிபராகப் பணியாற்றிய ஆசிரியர் சேவையைச் சேர்ந்த அருட் சகோதரி ஆயேஷா என்பவருக்கு பாடசாலைப் பொறுப்பை ஒப்படைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில், அவர் பாடசாலையில் பதில் அதிபராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் நீர்கொழும்பு வலயக் கல்வி அலுவலகத்தால் கடந்த வெள்ளிக்கிழமை, இந்தப் பாடசாலைக்கு அதிபர் சேவையைச் சேர்ந்த ஒருவர் அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் பதில் அதிபராக பணியாற்றும் அருட் சகோதரியை இடமாற்றம் செய்ய வேண்டாம் என வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதனையடுத்து, நீர்கொழும்பு வலய கல்விப் பணிப்பாளர் கே.ஏ.சி. பெர்னாந்து ஆர்ப்பாட்டம் இடம்பெறும் இடத்துக்கு வருகைத் தந்து பெற்றோர்களுடன் கலந்துரையாட்டினார்.
பின்னர் கல்விப் பணிப்பாளர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது,
“முன்னர் பணியாற்றிய அதிபர் ஓய்வுபெற்றுச் செல்லும் போது, அருட் சகோரியிடம் பாடசாலை பொறுப்பை ஒப்படைத்துச் சென்றுள்ளார். பதில் கடைமையாற்றும் அருட் சகோதரி ஆசிரியர் சேவையைச் சேர்ந்தவர். மாகாண கல்வித் திணைக்களத்தின் உத்தரவுப்படி பாடசாலைக்கு அதிபர் சேவையைச் சேர்ந்த ஒருவரை அதிபராக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
“ஆனால், பதில் கடைமையாற்றும் அருட் சகோதரியை இடமாற்றம் செய்யவில்லை. இந்த விடயம் தொடர்பாக மாகாண கல்வி அமைச்சுக்கும் கல்வித் திணைக்களத்துக்கும் அறிவித்து தீர்வைக் காண்போம். அதுவரை அருட் சகோதரி இந்த பாடசாலையில் அதிபராக பணியாற்றலாம்” எனத் தெரிவித்தார்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, பிட்டிபனை பிரதேசத்தில் பதற்றம் நிலவியதோடு, பொலிஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
24 minute ago
26 minute ago
32 minute ago