Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜனவரி 07 , பி.ப. 08:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
“புதிய தேர்தல் திருத்தத்தில், பெண்கள் 25 சதவீதமாக, கட்டாயம் உள்வாங்கப்படல் வேண்டும் என, திருத்தத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போன்றவற்றை மீறாது பெண்கள் அரசியலில் பிரவேசிப்பது இன்றைய காலத்தின் தேவையாகும்” என, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய மகளிர் அணித் தலைவி டொக்டர் ஹஸ்மியா உதுமாலெப்பை தெரிவித்தார்.
பெண்களின் அரசியல் மற்றும் வாழ்வாதாரம் தொடர்பில், நீர்கொழும்பு, பெரியமுல்லையில் நேற்று முன்தினம் (06) இடம்பெற்ற மகளிர்களுடனான விசேட கலந்துரையாடலின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
“உலகின் முதல் பிரதமர் உருவான பெருமையும் கெளரவமும் இலங்கை மக்களுக்குண்டு. அந்த கெளரவத்தைப் பாதுகாக்கும் நோக்கிலேயே, எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், 25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபாவின் சிபாரிசுக்கமையவே, தேர்தல்கள் ஆணைக்குழு இந்நடைமுறையைக் கட்டாயமாக்கியுள்ளது. இதேவேளை, பெண்களின் பாதுகாப்பு வழிகாட்டல்கள் அரசியலிலும், புதிய தேர்தல் சட்டத்திலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களின் முயற்சிகள் அதிகளவில் காணப்படுவதால்தான், இன்று அவர்கள் இவ்வாறு கெளரவப்படுத்தப்பட்டு வருகின்றனர். இது பெண்களுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரும் வரப்பிரசாதமாகும்” என்று அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
38 minute ago
1 hours ago
2 hours ago