Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 06:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைகளுக்கு அடிமையாகாது, கல்வித்துறையில் முன்னேறி நாட்டின் நற்பிரஜைகளாக உருவாக வேண்டுமென, முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
பைஸர் முஸ்தபா இளைஞர் மன்றத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, கொழும்பு மருதானையிலுள்ள, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மத்திய கொழும்பு காரியாலயத்தில், சனிக்கிழமை (01) நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நிகழ்வில் தொடர்ந்து கருத்துரைத்த அவர், இளைஞர்கள் இன்று பெருமளவில் போதைப்பொருளுக்கு அமையாகியுள்ளனர். கல்வி அறிவு இன்றியும் விளையாட்டுத்துறைகளில் அசமந்தப் போக்குடனும் உள்ளனர். எனவே, இவ்வாறான நிலை சமூகத்திலிருந்து மாற வேண்டும் என்பதே, எனது பாரிய எதிர்பார்ப்பாகும் என்றார்.
அத்துடன், போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள இளைஞர்கள் அவற்றைக் கைவிட்டு வாழ்க்கையில் முன்னோக்கி பயணிக்க வேண்டும் எனத் தெரிவித்த அவர், இளைஞர்கள் அரச தொழிலை மாத்திரம் நம்பி இருக்காது சுயதொழில் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
30 minute ago
1 hours ago
1 hours ago