Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Princiya Dixci / 2017 மே 18 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.இஸட்.ஷாஜஹான்
நீண்ட காலமாக மோட்டார் சைக்கிளில் பயணித்து, ஹெரோய்ன் போதைப்பொருளை விநியோகித்து வந்த, பேலியாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபரொருவரை, சீதுவை தடுகம பாலத்துக்கு அருகில் வைத்து 3,118 மில்லிகிராம் போதைப்பொருளுடன், நீர்கொழும்பு பொலிஸார், புதன்கிழமை (17) கைதுசெய்துள்ளனர்.
பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், போதைப்பொருள் வாங்குவது போன்று நடித்து, சந்தேகநபரை தடுகம பிரதேசத்துக்கு வரவழைத்து கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து, போதைப்பொருள் பக்கெற்றுக்கள் 40ஐயும் போதைப்பொருளை விநியோகிப்பதற்குப் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர், போதைப்பொருளை சிறிய பக்கெற்றுக்களாகப் பிரித்து ஒரு பக்கெற்றை 1,000 ரூபாய்க்கு, நீர்கொழும்பு மற்றும் கட்டனை பிரதேசங்களில் விற்பனை செய்து வந்துள்ளமையும், சந்தேகநபர் போதைப்பொருள் விற்பனை செய்தமை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு, ஒரு மாதத்துக்கு முன்னரே பிணையில் விடுதலையாகியுள்ளமை விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
23 minute ago
25 minute ago
28 minute ago