Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Princiya Dixci / 2016 நவம்பர் 15 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
தன்னிடம் ஆங்கிலம் கற்க வந்த 13 வயதுடைய பாடசாலை மாணவியைத் துஷ்பிரயோகப்படுத்த முயன்ற 59 வயதுடைய தனியார் வகுப்புகளை நடத்தி வரும் ஆசிரியரை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் சாந்த நிரிஹெல்ல, நேற்றுத் திங்கட்கிழமை (14) உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாகக் கட்டானைப் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஏ.டி.ஏ. சமன்மலி தலைமையிலான குழுவினர் ஆரம்ப விசாரணை மேற்கொண்டு சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபரினால் அவரது வீட்டில் நடத்தப்படும் தனியார் வகுப்புகளுக்கான பிரசார நடவடிக்கைகளுக்கான போஸ்டர், பெனர் கட்டவுட் தயாரித்தல் மற்றும் இறுவட்டுக்கள் தயாரித்தல் என்பவை இடம்பெற்றுள்ளதோடு, இரண்டு மாணவர்களுக்கு சந்தேகநபரால் ஆங்கிலம் கற்பிக்கப்பட்டு வந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று , குறித்த ஆங்கில வகுப்புக்கு ஒரு மாணவி மாத்திரமே வந்துள்ளார். இவ்வேளையில் சந்தேகநபர் அம் மாணவியைத் துஷ்பிரயோகப்படுத்த முயற்சித்துள்ளார்.
அச்சமடைந்த சிறுமி, அங்கிருந்து வெளியேறி அழுது கொண்டு விதி வழியாகச் சென்றுள்ளார். வீதியில் நின்ற இளைஞர் குழுவொன்று, சிறுமி அழுவதற்கான காரணத்தைக் கேட்டுள்ளது.
இதன்போது வான் ஒன்றில் வந்த மேற்படி சந்தேகநபரை, இளைஞர் குழு தாக்கி, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பொலிஸார், சந்தேகநபரை, நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
நீர்கொழும்பு பதில் நீதவான் வைத்தியசாலைக்குச் சென்று சந்தேகநபரை பார்வையிட்ட பின்னர், எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
சந்தேகநபர் சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பாதுகாப்பின் கீழ், நீர்கொழும்பு வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
36 minute ago
56 minute ago
1 hours ago