Princiya Dixci / 2017 ஏப்ரல் 23 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெங்குக் காய்ச்சலிருந்து மாணவர்களைப் பாதுகாப்பதற்காக, பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக, மினுவாங்கொடை வலயக் கல்விக் காரியாலயம் அறிவித்துள்ளது.
இரண்டாம் தவணைக்காக 26ஆம் திகதி புதன்கிழமை, பாடசாலைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக, நாளையும் (24) நாளை மறுதினமும் (25), மினுவாங்கொடை வலயக் கல்விக் காரியாலயத்துக்குட்பட்ட சகல பாடசாலைகளையும் சுத்திகரிக்க, கூட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக, மேலதிக கல்விப் பணிப்பாளர் பி. குமாரசிங்க தெரிவித்தார்.
டெங்கு அச்சுறுத்தல் தொடர்ந்தும் காணப்படுவதால், சுகாதார, கல்வி, உள்ளூராட்சி மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றை இணைத்து, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் பணிப்புரைக்கமைய இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
டெங்கு நுளம்புகள் உருவாகக் கூடிய இடங்கள் அடையாளங் காணப்பட்டு, அவற்றைச் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
டெங்கு ஆபத்திலிருந்து மாணவர்களைப் பாதுகாக்கும் பொருட்டு, விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை, பாடசாலை நாட்களில் இதற்கென பத்து நிமிடங்களை ஒதுக்குவதற்கான நடவடிக்கைகள், கல்விப் பணிப்பாளர் எம்.எல்.டீ.என். டைட்டஸ் மேற்பார்வையில் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
44 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
49 minute ago
1 hours ago
1 hours ago