Princiya Dixci / 2016 பெப்ரவரி 23 , மு.ப. 11:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டட நிர்மாண வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சிறுவனொருவனின் மீது மதில் இடிந்து விழுந்ததில் அச்சிறுவன் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம், வத்தளை, குணதிலக மாவத்தையில் இன்று செவ்வாய்க்கிழமை (23) இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த முகமட் பஸ்வான் என்ற 17 வயதான சிறுவன், றாகம வைத்தியாசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
காயங்களுக்குள்ளான மற்றையவர், றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவித்த பொலிஸார், இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
54 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago