2025 மே 05, திங்கட்கிழமை

மதுவுக்காக உண்ணாவிரத போராட்டம்

Kogilavani   / 2017 மார்ச் 28 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

மது அருந்துவதற்கு தனது மனைவி தடைவிதித்தமைக்கு எதிர்ப்புத்தெரிவித்து, கணவன் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த சம்பவம் ஒன்று, இரத்தினபுரி குருவிட்ட, எனசல்தொல பகுதியில், இன்று இடம்பெற்றுள்ளது.

மது அருந்துவதற்கு மனைவி மறுப்பு தெரிவித்தமைக்கு எதிர்ப்பு காட்டும் முகமாக, குறித்த நபர் மின்சார தூணின் மீது ஏறி உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளார்.

இது தொடர்பில், குருவிட்ட பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், குறித்த நபருடன் பேச்சுவார்ததை நடத்தி அவரை மின்சாரத் தூணில் இருந்து கீழே இறக்கியுள்ளனர்.

கீழ் இறங்கிய நபரை, பொலிஸார் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

மதுபானம் அருந்துவதற்கு இடமளிக்காதமையினால் இவ்வாறு உண்ணாவிரதத்தை முன்னெடுத்ததாக, குறித்த நபரின் மனைவி தெரிவித்துள்ளார்.

கீழே இறக்கப்பட்ட நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போன்று செயற்படுவதால், அவரை மனநல வைத்தியசாலையில் அனுமதிப்பதற்குப் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X