2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

மாணவர்களுக்கு மின் பாய்ச்சிய சம்பவம்: அதிபர் உட்பட மூவருக்கு பிணை

Editorial   / 2022 நவம்பர் 16 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமது வித்தியாலயத்தில் தரம் 5 இல் கல்விப்பயிலும் மாணவர்கள் மூவர் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களுக்கு மின்சாரம் பாய்ச்சி தண்டனை வழங்கினர் என்றக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை,  மில்லனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர், மில்லனிய பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஆகியோரே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்ட கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா  வழக்கை ஜனவரி 18 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .