Editorial / 2022 ஜூன் 06 , பி.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு-15 முகத்துவாரம் பகுதியில் இன்று (06) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில், பொலிஸ் திணைக்களம் ஊடக அறிக்கையொன்றை விடுத்துள்ளது.
முகத்துவாரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரெபாணா வத்தை முன்பக்கமாக, முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாத இருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயரிழந்தார்.
உயிரிழந்த 24 வயதான நபர், கொழும்பு-15, அளுத்மாவத்தையை வசிப்பிடமாகக் கொண்டவர் ஆவார்.
போதைப்பொருள் அல்லது வேறு வர்த்தகத்தால் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாட்டினால், இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மரணமடைந்த நபர், போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்தவர். பின்னர் பிணையில் விடுக்கப்பட்டிருந்த நபராவார்.
மரணமடைந்தவரின் பூதவுடல், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முகவத்துவாரம் பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
14 minute ago
51 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
51 minute ago
3 hours ago
3 hours ago