Editorial / 2020 பெப்ரவரி 03 , பி.ப. 06:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
பேருவளை, அளுத்கம, தர்காநகர் உள்ளிட்ட பல பிரதேசங்களில், எவ்வித முன் அறிவித்தலும் இன்றி, இன்று (03) மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், தாம் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இச்செயற்பாட்டால், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பணிகளை முன்னெடுக்க சிரமங்களை எதிர்நோக்கியதுடன், பொதுச் சேவைகளை நாடிச் சென்ற பெரும்பாலான மக்கள் பெரும் அசௌகரியங்களையும் எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில், பிரதேச மின்சார சபை காரியாலயத்துடன் தொடர்புகொண்டு வினவியபோது, இந்த விடயம் தொடர்பில் பதில் வழங்க முடியாதென, அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .