Editorial / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 06:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல் மாகாணத்தில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டச் செயலாளர்களின் பூரண கண்காணிப்பின் கீழ், நிவாரணப் பொதிகளை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அந்தந்த கிராம சேவையாளர் பிரிவுகளில் சிக்கியுள்ளோர் தொடர்பில் கிராம உத்தியோகத்தர், பொலிஸாரின் உதவியுடன் குறித்த நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்குத் தேவையான நிதியை, மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குமாறு, திரைசேறிக்கு அறிவித்துள்ளதாக, பொருளாதார மறுசீரமைப்பு, வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி தெரிவித்துள்ளது.
இதுவரை கிடைக்கப்பெற்றுள்ள தரவுகளுக்கு இணங்க, வெளிமாவட்டங்களில் இருந்து தொழில் நிமித்தம் வருகைதந்த 52,000க்கும் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனரெனவும் மேற்படி செயலணி சுட்டிக்காட்டியுள்ளது.
38 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
40 minute ago
2 hours ago