2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

“ரஜீவ் யசிரு” பிணையில் விடுதலை

Freelancer   / 2021 ஜூன் 10 , மு.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இணையத் தளங்களில் போலியான செய்திகளை வௌியிட்டார், என்றக் குற்றச்சாட்டின் கீழ் ஜூன் 8 ஆம் திகதியன்று கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த,ரஜீவ் யசிரு குருவிட்டகே கொழும்பு பிரதம நீதவானால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் அவர் நேற்று (09) விடுதலை செய்யப்பட்டார்.

ஜனாதிபதி செயலகம் வௌிவிவகார அமைச்சு உள்ளிட்ட அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் ஊடுருவப்பட்டுள்ளதாக சந்தேகநபரால் தயாரிக்கப்பட்ட அறிக்கை சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதை அடுத்தே, அவர் கைது செய்யப்பட்டமை சுட்டிக் காட்டத் தக்கது.

சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டதைப் போல ஜனாதிபதி செயலகம் அல்லது ஏனைய அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையதளங்கள் சந்தேகநபரல்ஊடுறுவப்பட்டுள்ளதா? என்பது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

M

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .