2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

’ ரணில் கோ கம’ மாயமானது

Editorial   / 2022 ஓகஸ்ட் 17 , பி.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷாஜஹான்

நீர்கொழும்பு  'ரணில் கோ கம' இனம் தெரியாத  நபர்களால் நள்ளிரவில் அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு  தெரிவித்து தெல்வத்தை சந்தியில்,  இன்று (17) மாலை ஆறு மணியளவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாதைகளையும் சுலோக அட்டைகளையும் ஏந்தி இருந்ததோடு அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக குரல் எழுப்பினர்.

சிவில் சமூகத்தினர் மற்றும் மீனவர்கள் உட்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

நீர்கொழும்பு ‘ரணில் கோ கம’ இன்று (17) அதிகாலை 1.30 மணியளவில் இனம் தெரியாத நபர்களால் முற்றாக அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X